Sunday, May 13, 2018

பரப்பிரம்மம்




அன்புள்ள ஜெ




சுகர் இறுதியில் வரும்போது கீதையின் செய்தி தெளிவாகிவிட்டதென நினைக்கிறேன். அது எல்லாருக்கும் அவரவருக்குரிய மீட்பைச் சொல்கிறது. கர்ணனிடம் உலகியலைப் போராடிப்பெறுக என்கிறது. ஆனால் உச்சத்திலே சுகர் தான் நிற்கிறார். அவருக்கு கிருஷ்ணனே ஒரு பொருட்டல்ல. அவருக்கு வியூக, அர்ச்ச, அவதார தெய்வங்கள் ஒரு பொருட்டே கிடையாது. அந்தர்யாமியும் பொருட்டு கிடையாது. பிரபஞ்சநாயகனாகிய பரப்பிரம்மம் மட்டுமே போதும். அவரைப்பற்றித்தான் கீதைத் திரும்திரும்பச் சொல்கிறது. அவர் வந்தபோதுதான் அதுவரை எழுதிவந்த அனைத்தும் முழுமையை அடைகிறது. நாம் புழங்கும் பணத்துக்கு அர்த்தமளிக்க தங்கம் ரிசர்வ் பேங்கில் இருப்பதைப்போல நம் ஞானத்துக்கு அர்த்தம் அளிக்க ஒருவராவது மேலேறி ஞானத்தை அடைந்தாகவேண்டும்


ராம்