ஜெ
பீஷ்மரின்
முயற்சி என்பது ஆயிரம் அம்பையும் தவறாமல் விடுவது. ஆயிரத்தில் ஓர் அம்பை தவறவிட்டுவிடுகிறார்.
அது அவரை வில்லம்பு என்ற அந்தச் சுழற்சியில் கட்டிப்போட்டுவிடுகிறது. அதைப்பற்றி மீண்டும்
ஒருமுறை இமைக்கணத்தை வாசித்தபோது யோசித்துப்பார்த்தேன். என்ன நடக்கிறது? அவருக்கு இந்த
உலகில் இனி எதிலும் ஆசை கிடையாது. அவர் அடையவேண்டியதும் ஆற்றவேண்டியதும் இல்லை. ஆனாலும்
உலகவாழ்க்கை விட்டுவிடுவதில்லை. இதிலிருந்து தப்பமுடியவில்லை. அது இந்த பெர்ஃபெக்ஷன்
மீதான அப்ஸெஷனால்தான். அதுதான் அவரை செயல்படச்செய்கிறது. அவர் அதனால்தான் விட்டுவிட
முடியாமல் இருக்கிறார். கடைசியில் அவர் சொல்லும் பீஷ்மநீதிகூட ஒரு பெர்ஃபெக்ட் அரசாங்கத்தைப்பற்றித்தானே?
ராஜ்