என்று கிருஷ்ணன் உத்தங்கரிடம்
சொல்லும் வரியை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு புதிர்போலவே தோன்றியது. அதை எப்படிப்
புரிந்துகொள்வது? அறம் என ஒன்று இல்லையா? அப்படி ஒன்றை வகுத்துக்கொண்டால் நாம் இங்கே
அறத்துக்காக நடத்தும் போர்களில் ரத்தம் சிந்தவைத்தவர்களாக ஆகிவிடுவோமா? அப்படியென்றால்
அறமே தேவையில்லையா?
அந்த
வரியை பின்னர் ஞாபகத்தில் கொண்டுவந்தது அனைத்து அறங்களையும் கைவிடுக என்ற வரியை வாசித்தபோது.
அது உத்தங்கருக்குச் சொல்லப்படவில்லை. உத்தங்கர் அறங்களைக் கைவிடவில்லை. கைவிட்டவர்
சுகர்தான். ஆகவே அவர் வேறு இடத்துக்குச் செல்கிறார்
ரவீந்திரன்