Tuesday, May 29, 2018

செந்நா வேங்கை




அன்புள்ள ஜெ

எதிர்பார்த்திருந்த போர் தொடங்கவிருக்கிறது. தலைப்பே பதற்றமான மன எழுச்சியையும் அதேசமயம் ஓர் அழகுணர்வையும் உண்டுபண்ணுவதாக உள்ளது. நாங்கள் ஒருமுறை காசிரங்கா காட்டுக்குள் வேட்டையாடி தின்றுகொண்டிருந்த ஒரு புலியைப்பார்த்தோம். அந்த விலங்கு என்ன என்று அந்தப்பதற்றத்தில் சரியாகக் கவனிக்கவில்லை. அதிகநேரம் பார்க்கவுமில்லை. ஆனால் அந்த சிறிய நேரத்திலேயே புலியின் வாய் ரத்தத்தால் சிவந்திருப்பதையும் மீசைமுடிகளில் ரத்தம் இருப்பதையும் பார்த்தேன்  நீண்டநாள் என்னால் அந்தக்காட்சியை மறக்கமுடியாமல் இரவில் கனவுகண்டேன். செந்நா வேங்கை என குருக்ஷேத்திரத்தைச் சொல்லியிருப்பது அழகான ஆனால் குரூரமான கற்பனை என நினைக்கிறேன்

மீனாக்ஷி ராமநாதன்