Monday, May 21, 2018

பெண்ணும் ஞானமும்




ஜெ


நான் இமைக்கணம் 40 ஐ வாசித்துக்கொண்டே இருக்கிறேன். பெண்ணுக்கு தவ வாழ்க்கை உண்டா என்ர கேள்வியை நான் நிறையமுறை கேட்டிருக்கிறேன். என் குடும்பத்துக்கு ஒரு யோகினி அறிமுகம் உண்டு. நல்ல அழகி. ஆனால் 20 வயதிலேயே துறவியாகிவிட்டார்கள். நிறைய தவம் செய்திருக்கிறார்கள். ஏராளமாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய அலைச்சல்தான். ஆனால் 50 வயதுவரை அது ஒருமாதிரி போனது. அதன்பின் எந்தப்பிள்ளையைப் பார்த்தாலும் கண் நிறைந்துவிடும். எனக்கே அது ஏன் அப்படி ஒரு நெகிழ்ச்சி என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் இயல்பு என்று தோன்றும். அவர்கள் பின்னார் இறந்துவிட்டார்கள். அவர்களால் பிள்ளைப்பாசம் என்ற மனநிலையிலிருந்து விடுபடவே முடியவில்லை. அவர்கலின் வழி அது. ஆனால் அவர்கள் அதை உதறவேண்டும் என்றுதான் வாழ்க்கைமுழுக்க முயற்சிசெய்தார்கள். அது அவர்களுக்கு அவ்வளவு கடினமானது. ஒருவேளை அக்கமாகாதேவியோ காரைக்காலம்மையோ அதெல்லாம் முடிந்திருக்கலாம். பெண்களுக்கான வழியே அல்ல அது என நினைக்கிறேன். கிருஷ்ணன் அதைச்சொன்னதும் பெரிய நிறைவு ஏற்பட்டது

கனகா