Thursday, May 17, 2018

ஏழு நாகங்கள்




ஜெ

நாகங்களின் பெயர்களின் வழியாக அந்தக் கேள்விகளைத் தொகுத்துக்கொள்கிறேன். ஒரு நாள் முழுக்க உட்காந்து இந்த பட்டியலைப்போட்டேன். புரிந்துகொள்ளும் வசதிக்காக

1 அஸ்வஸ்தை – restlessness

 வேதாந்தம் சொல்லும் அடிப்படையான விஷயம் புறத்தே உள்ளது கிடையாது. முழுக்கமுழுக்க சப்ஜெக்டிவ் ஆனது. ஆகவே சப்ஜெக்டிவ் லாஜிக்கை மட்டுமே முன்வைக்கமுடியும். அதற்கு அறிவு என்னும் மதிப்பு இல்லை

வேதமுடிபு என்பது அகத்தே எழுந்து தன் நிழலை மட்டும் வெளியே காட்டும் ஓர் அறிதல் மட்டும்தானா?

2 ஆகாம்ஷை anxiety

தர்க்கங்களில் பிறரை அவர்கள் பேசமுடியாத இடங்களில் இழுப்பதன் வழியாகவே வேதாந்தம் ஜெயிக்கிறது.எப்போதும் உச்சத்தில் அறிவுகடந்த ஒன்றை வைத்தே ஜெயிக்கிறார்கள்

3 ஜிக்ஞாஸை curiocity

அது அறியமுடியாதது என்பதே வேதாந்தத்தின் கேள்வி.. அறியமுடியாததைப் பற்றிய அறிவு என ஒன்று இருக்கலாகுமா? அறிவென்பது வரையறை. வேதாந்தம் வரையறைகளை மறுக்கிறது அவர்கள் சர்ச்சை செய்வதில்லை. சர்ச்சைகளை மறுக்கிறார்கள்

4 விஃப்ரமை illusion

எல்லாம் ஒன்றே என்ரால் ஏன் வேறுபாடுகளைப்பற்றி பேசவேண்டும்? கண்கூடான யதார்த்தத்தை தர்க்கத்தால் வேதாந்திகள் மறுக்கிறார்கள்

5 விபரீதை negation

பித்தர்களுக்கும் பரமஹம்சர்களுக்கும் என்ன வேறுபாடு? அவ்வேறுபாட்டை ஞானிகள் மட்டுமே அறிவார் எனில் ஞானம் என்பது அவரவர் சொல்லிக்கொள்வது மட்டும்தானே? கோடியில் ஒருவர் மட்டும் ஏறும் ஏணியா இது?

6 விவர்த்தை transformation

அந்த கடைசிக்காரணம் எதுவோ அதுவே இங்கே உள்ள எல்லாமாக இருக்கும். அது அறியமுடியாதது என்றால் இங்குள்ள எல்லாமே அப்படித்தான்

7 விமதை revolt

கண்முன் உள்ள பிரச்சினையை சிற்றுண்மை என்று விலக்கிவிட்டு பேருண்மை என எதையோ தேடுகிறதா வேதாந்தம்?

சங்கர் கிருஷ்ணா