Monday, May 14, 2018

க்ஷரம் அக்ஷரம்



ஜெ அவர்களுக்கு

கீதையுடன் இணைந்து வரும் பகுதிகளை கீதையின் சம்பந்தப்பட்ட இடங்களுடன் இணைத்தால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது


.
க்ஷரன்,அக்ஷரன் என்னும் இரண்டுவரை பரப்பிரம்ம நிலைகளைப்பற்றி கீதை சொல்கிறது. பேருருவனாகி வந்து சுகனிடம் கிருஷ்ணன் அதைச் சொல்கிறான். அசைவோன் அசைவிலன் என்று மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.புதிய சொல்லாட்சி.அதை இடம் அறிந்து புரிந்துகொண்டமையால்தான் இந்தப்பகுதி பிடிகிடைத்தது. க்ஷரன் அக்ஷரன் என்னும் ரெண்டும் இல்லாத பரம்பொருள்தான் கடைசியில். சுகர் இந்த இருவகை பரம்பொருளையும் நிராகரித்துக்கொண்டுதான் மேலே செல்கிறார். மூன்றாம் பரம்பொருளை சென்றுசேர்கிறார்


சாரங்கன்