அன்புள்ள
ஜெ
வெண்முரசின்
முதற்கன்ல் முதலிய நாவல்களைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சி
வியப்படையச்செய்கிறது. முதல் நாவலிலேயே குருக்ஷேத்ரம் வந்துவிட்டது. அந்த நாவலில் கவிஜாதன்
என்ற நாகன் குருக்ஷேத்ரத்தை கூட்டிக்கொண்டு சென்று காட்டுகிறான். இமைக்கணத்தில் அவன்
கைக்குழந்தையாக நாகினியின் இடுப்பில் இருக்கிறான். குருக்ஷேத்ரம் அது முதல் வந்துகொண்டே
இருக்கிறது. வெவ்வேறு குறிப்புகள். காத்திருக்கும் கைவிடுபடைகள்.கண் திறக்கும் ருத்ரர்கள்.
ரத்தமழை. எல்லா குறிப்புகளும் இனிமேல் நடக்கவிருக்கும் போருக்கான ஏற்பாடுகள் மட்டுமே.
இந்தப்போரில்தான் எல்லாமே முடிவாகின்றன. மரணதேவி காத்திருக்கிறாள். மூன்று தலைமுறைக்காலமாக.
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
செந்தில்