வேதமுடிபு உலகியலுக்கான விளக்கம் அல்ல. உலகியல் அனைத்துக்கும் நிகரெடையாக மறுமுனையில் நின்றிருக்கும் ஓர் உள எழுச்சி மட்டுமே- வேதாந்தத்தைப் பற்றிய அழகிய விளக்கம். உலகியலை
வேதாந்தம் கொண்டு விளக்க முடியாது. நான் வகுப்புகள் நடத்துகிறேன். உலகியலில் விடை தேடும்போது
வேதாந்தம் பதில் சொல்லாது என்று சொல்லுவேன்.
வேதாந்தம் எங்கே பதில் சொல்லுமென்றால்
எங்கே உலகியலில் பதில் இல்லாமல் மனசு திகைத்து சொல்லில்லாமல் ஆகிறதோ அங்கேதான். அது
நிகழாமல் மனுஷ வாழ்க்கை இல்லை. ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தாலே நாம் மலைத்துப்போய் இதெல்லாம்
என்ன என்று கேட்க ஆரம்பித்துவிடுவோம். அன்றாடவாழ்க்கைக்கு அப்பால் ஏதாவது நடந்தால்
நமக்கு லௌகீகமாக பதில்கள் இல்லை என்பதை மூச்சுத்திணறத்திணற உணர்ந்துகொள்வோம். அதுக்குமேலேதான்
வேதாந்தத்தின் இடம் வருகிறது. அ
து ஒரு பெரிய தர்சனம். ஒரு பூர்ணதர்சனம்.
அதை அடைந்தபின் அதிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீட்டி உலக விஷயங்களைப்புரிந்துகொள்ளவேண்டும்
ஆர்