ஜெ
நீலம்
நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இடைவெளிகளில் எல்லாம் நீலத்தை
இன்னொருமுறை சென்று வாசிப்பது என்னுடைய வழக்கம். நீலம் தான் வெண்முரசு நாவல்களின்
உச்சம் என நினைக்கிறேன் . மொழி, வடிவம் எல்லாமே கச்சிதமாகவும்
பித்துப்பிடிக்கவைப்பதாகவும் அமைந்த நாவல் அது. அதிலேயே விஸ்வரூபதர்சனம்
வந்துவிடுகிறது. இந்நாவலில் திரௌபதிக்குச் சொல்லும் கீதை அதில் ராதையால்
சொல்லாமலேயே உணரப்படுகிறது. அதிலுள்ள கிருஷ்ணன் என்பதே ராதையின் கற்பனைதான்.
அந்தக்கற்பனையைத்தான் கிருஷ்ணையும் அடைந்திருக்கிறாள். அவள் காண்பது அந்த
மயிற்பீலியைத்தானே?
சித்ரா