Sunday, May 13, 2018

சம்சார மரம்




ஜெ

கீதையில் வரும் சம்சார மரம் பற்றி ஏராளமாகப் பேசப்பட்டுள்ளது. அது முன்னரே சூத்ரங்களில் சொல்லப்பட்ட உவமை. முதலில் அதை வேதம் என்ற மரம் என்கிறது கீதை. பிறகு சம்சார மரம் என்கிறது. அழகானது. உலகமாகப் பரவியது. கிளைகளாக செழிப்பது. ஆனால் அதை வெட்டிவீசாமல் மீட்சி இல்லை. அதை விளக்கும் அரிய வரி இறுதி நிழலையும் இழந்தவன் மீதே வான் எழுகிறது! இந்த வரி வழியாக கீதையிலே சொல்லப்பட்ட அந்த சம்சார மரத்தைச் சென்று வாசிக்கையில் புதிய அர்த்தம் வருகிறது.

மகாதேவன்