Thursday, May 17, 2018

கனவுக்குள் கனவு



ஜெ

இமைக்கணம் முடிந்தபிற்பாடுதான் அதன் முழுமையான வடிவம் மனதிலே வந்தது. கீதைதான் இதன் மையம். ஆனால் அதைக் கடைசியில் சொல்கிறீர்கள். அது ஒரு இமைக்கணத்தில் அர்ஜுனன் தனக்குள்தானே அடைந்த wisdom மட்டும்தான். அதில்தான் அவன் கிருஷ்ணனை கடவுளாக பரம்பொருளாக விஸ்வரூபமாக பார்க்கிறான். அதற்குவெளியே கிருஷ்ணன் கிருஷ்ணனாகவே இருக்கிறான். அர்ஜுனன் அடைந்த கனவுக்குள்தான் மொத்த இமைக்கணமும் நிகழ்கிறது. கதைகதையாகப் பின்னால்சென்று அந்தப்புழுவரை அந்தக்கனவைக் கொண்டுசெல்லலாம்.

இப்படிப்பார்த்தால்தான் கீதை இந்த கதைக்குள் பொருந்துகிறது. இது அர்ஜுனன் அடைந்தது. அர்ஜுனனே கனவுக்குள் யமனாகவும் வந்தான். யமன் சென்றதும் கேட்டதுமெல்லாம் அர்ஜுனன் கேட்டதுதான். கனவுக்குள் கனவு என்று செல்கிறது. அல்லது எல்லாருமே சேர்ந்துகண்ட கனவு இது. யுதிஷ்டிரரும் அதே கனவைக் காண்கிறார்

இப்படி வந்தால்தான் கிருஷ்ணன் இந்த நாவலுக்கு வெளியே மனிதனாக, யாதவனாக இருப்பது நன்றாக பொருந்திவரும். இந்த இணைப்பு அழகானதாக இருக்கிறது. வேதாந்தம் பற்றிய விவாதமும் நிகழ்கிறது. ஆனால் அந்த தரிசனங்கள் வேறு ஒரு தளத்திலே நடந்து முடிகின்றன

ஜெயராமன்