Monday, May 14, 2018

மூவியல்பு




ஜெ

நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்பு என்று சத்வகுணம் ரஜோ குணம்  தமோகுணம் ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். ஆரம்பத்திலே கொஞ்சம் இடறுவதுபோலிருந்தது இந்த மொழியாக்கம். கொஞ்சம் கவனித்தபோது புரிந்தது. சத்வம் ரஜஸ் தமஸ் ஆகியவை மனித உள்ளத்தைத்தன் குறிக்கும். அதிலிருந்து பிரபஞ்சத்துக்கு விரிவாக்கிக்கொண்டார்கள்.

ஆனால் பிரபஞ்சவிசைகளைச் சொல்வதாக இருந்தால் இம்மூன்று குணங்களையும் இப்படி விரிவாக புரிந்துகொண்டு மொழியாக்கம் செய்வதே நல்லது. தமோகுணத்தை இருட்டு கெட்டகுணம் என்றெல்லாம் புரிந்துகொள்ளாமல் ஸ்டேடிக் ஃபோர்ஸ் என்றும் ரஜோ குணத்தை ஆக்டிவ் ஃபோர்ஸ் என்றும் சத்வ குணத்தை நியூட்ரல் ஃபோர்ஸ் என்றும் புரிந்துகொள்ளலாம்.

இது மிக உதவியானது. ஏனென்றால் சத்வகுணம் உயர்ந்தது என்று சாதாரணமாக உபன்யாசங்களில் சொல்வார்கள். அது மனிதர்களில் உயர்ந்த குணம். அதை கீதையும் சொல்கிறது. ஆனால் பிரபஞ்சநெறியிலே அப்டி இல்லை. அங்கே முக்குணங்களும் சமானம். மூன்று குணங்களையும் வேரோடு அறுக்கும்படி கிருஷ்ணன் சொல்கிரார். அங்கே ஏன் சத்வகுணத்தை அறுக்கவேண்டும் என்ற கேள்வி எழும். அதுவும் குணங்களின் சமன்பாட்டில் அல்லது பின்னலில் ஒரு இழை மட்டுமே என்று புரிந்துகொண்டால்தான் அந்த வரியை விளங்க முடியும். அதற்கு இந்த மொழியாக்கம் நல்லதுதான்.

ஒரு வேதாந்த வகுப்பில் புரிந்துகொண்டதையே இப்படி மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

மனோகரன்