Thursday, May 10, 2018

பத்துவகை வீடுபேறுகள்



ஜெ

இமைக்கணத்தின் இறுதியில் வந்த அந்த தலைக்கீழாக்கம் நன்றாக் இருந்தது. ஒரு தாளத்தின் முத்தாய்ப்பு போல. அதுவரை எல்லாரும் கிருஷ்ணனை நாடி வருகிறார்கள். அவன் சொல்வதைக் கேட்கிறார்கள். சுகன் தேடிவருவதில்லை. சொல்வதைக் கேட்பதுமில்லை. கிருஷ்ணன் தேடிப்போய் சொல்கிறார். அதேபோல விஸ்வரூபம் முதலிலேயே வருகிறது. விஸ்வரூபம் சுருங்கி காலடிப்பொடியாக ஆகிறது. அவர் விண்புகுந்த கணத்தில்தான் கீதையின் உச்சகட்ட வாக்கியம் வெளிப்படுகிறது

கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், வியாசர், யுதிஷ்டிரர், திரௌபதி, குசேலர், உதங்கர், சுகர் என பத்துவகையான முக்திகளை இந்நூலில் சொல்லி எல்லாமே கீதை வழிகாட்டுபவைதான் என்கிறீர்கள் என வாசித்தேன். நன்றி சார். இதுதான் வெண்முரசு நாவல்களில் மிக சவாலானது. மிக உச்சமானது

சுரேஷ் ஆறுமுகம்