ஜெ
எமன் எதற்காகச்
சிரித்தான் என்பதில்தான் இமைக்கணத்தின் தொடக்கத்தில் அவன் கேட்ட கேள்விக்கான பதில்
இருக்கிறது. அவ்வளவு பெரிய சோர்வுக்கு அவனை ஆளாக்கியது ராமனின் முடிவு பற்றிய குழப்பம்.
அந்த அவதாரம் ஏன் மனிதனாகச் சிறுத்தது? அடுத்து வந்த இந்த அவதாரமும் மனிதனாகவே மடிகிறது.
எவ்வளவு ஞானம் சொல்லி என்ன வேடனின் அம்புதானே மிச்சம்? அந்த அப்சரிடிடி தான் அவனைச்
சிரிக்கவைக்கிறது. அதை எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே செல்கிறான். அவதாரங்கள் மனிதர்களாக
மாறி மானுட வாழ்க்கையை நடிப்பவைதானே? ஆகவே ராமன் எப்படி அவனை வாழ்க்கை முழுக்க கட்டியிருந்த
துக்கத்திலிருந்து விடுபட முடியும்?
ஸ்ரீனிவாசன்