Saturday, March 16, 2019

சிம்பு2



அன்புள்ள ஜெமோ!

புதிய சொற்களோ அல்லது புதிதாகப்பயன்படுத்தப்படும் பழம் சொற்கள் திறக்கும் வாசல் அலாதியானது.நடிகர் சிம்புவிற்கு இந்த அர்த்தம் தெரிந்ததால் தான் எஸ்டிஆராக மாறினாரோ என்னமோ :-)

நிற்க.. கன்னடத்தில் குரலுக்கு பல நேரங்களில் "கண்டம்"(கழுத்து) என்ற பெயர்ச்சொல்லைப்பயன்படுத்துவதைப்பார்த்திருக்கிறேண்,
அதற்கு இலக்கணம் கேட்டால் தெரியவில்லை என்று சொல்வார்கள். நான் தமிழில் ஆகுபெயர்களை விளக்குவேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.
மொழி எனக்கு என்றும் ஒரு வியப்புத்தான். 

அதுவும் உங்கள் மொழி மேலும் வியப்பளிப்பது. விஷ்ணுபுரத்தின் மொழியின் சிறு சாயல் கூட வெண்முரசில் எனக்குத்தெரியவில்லையென்பது எனக்கு உங்கள் எழுத்தில் மேலும் வியப்பூட்டுகிறது.

ஜெய்கணேஷ்