ஜெ
கடோத்கஜன் சாவுக்குப்பின் பீமன் அடையும் மனக்கொந்தளிப்பை வாசித்தேன். அப்போது அந்த இளமையான கடோத்கஜன் தோன்றுகிறான். அது மிக ஆழமான ஒன்று. இதை என் சொந்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். என் சொந்த அண்ணா ஒரு விபத்தில் இறந்தபோது அப்பா மனம் உடைந்துவிட்டார். சித்தம் பேதலித்ததுபோல ஆகிவிட்டது. ஆனால் அன்று இரவு அவர் சிரிப்பதைக் கேட்டேன். தூக்கத்தில் கனவில் அண்ணனுடன மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். கண்விழித்து அண்ணன் புது பைக் வாங்கியிருக்கிறான். விஜயகாந்த் மாதிரி இருக்கிறான் என்று சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. அதை டாக்டரிடம் கேட்டேன். அந்தக்கனவு ஒரு பிரஷர் ரிலீஸ். அது கனவு என்று தெரிந்தாலும் நரம்புகள் தளர்ந்து அவர் ரிலீஃப் ஆகிவிடுவார் என்று சொன்னார். கடோத்கஜன் சாவின்போது பீமன் அவனை சின்னப்பையனாகப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அவனுடைய மனம் ஆறுதலடைவதுதான்
சுந்தர் செல்லப்பா