ஒரு வாசகர் பாகன்களின் சாவைப்பற்றி எழுதியிருந்தார்.
நான் அப்போது குதிரைகளின் சாவைப்பற்றித்தான் நினைத்தேன். போர் முழுக்க இரண்டு தரப்பினரும்
குதிரைகளை கொன்றுகொண்டே இருக்கிறார்கள். யானைகளாவது போரிடுகின்றன. அவை பிறரை கொல்கின்றன.
ஆகவே அவை கொல்லப்படுவதிலும் நியாயம் உண்டு. ஆனால் குதிரைகள் தேரை இழுக்கின்றன அவ்வளவுதான்.
அவற்றுக்கும் போருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் புரவிகளை வெட்டி வீழ்த்திக்கொண்டே
இருக்கின்றனர். அவை செத்த்தும் இழுத்துப்போட்டுவிட்டு வேறு புரவிகளைக் கட்டுகிறார்கள்.
குதிரைகள் நேராக அம்புகளுக்கு எதிரே நிற்கின்றன.வரலறு முழுக்க குதிரைகளுக்கு இழைக்கப்பட்ட
அநீதி மிக மிக அதிகம் என்று தோன்றுகிறது.
சுவாமி