Monday, March 4, 2019

சூதர்கள்




துருமன் இறந்ததும் சக்ரன் என்ற பாகன் வந்து இயல்பாக கர்ணனின் தேரை ஓட்டுகிறான். அவனுக்கும் எந்த அடையாளமும் இல்லை.ஆற்றில் நீரை அள்ளினால் அந்த பள்ளம் நிரம்பிவிடுவதுபோல. அவர்கள் மௌனமாக வந்து செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்நாவலில் பாகனின் தலையை சீவி எறிந்த்து அம்பு என்ற வரி எத்தனை இடங்களில் வருகிறது! அவர்கள் பெயரே இல்லாமல் வந்து செத்துக்கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான பாகன்கள் ஆயுதம் ஏந்தாதவர்கள். ஆனால் கவசம் அணிந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் எழுந்து ஓட முடியாது. தேரின் முகப்பில் அமர்ந்திருக்கவேண்டும். எந்தப்பாதுகாப்பும் இல்லை. தேரை உடைப்பதுபோல அவர்களைக் கொல்கிறார்கள். அந்த பரிதாபமான மனிதர்களைப்பற்றிச் சூதர்கள் பாட மாட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் சூதர்கள். இப்படி சொல்லாமல் விட்டுச்செல்லும் இடங்கள்தான் இந்நாவலை வரலாற்றுக்குச் சமானமாக ஆக்குகின்றன

எஸ்.ராமச்சந்திரன்