Saturday, March 9, 2019

துச்சாதனர்கள்



அன்புள்ள ஜெ

சில அன்றாட யதார்த்தங்களில் வெண்முரசு வந்து பொருந்தும் உண்மையைத்தான் நான் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எக்காலத்துக்கும் பொருந்தும் சில விஷயங்களை அது சொல்லிக்கொண்டிருக்கிறது. துச்சாதனன் அதில் ஒரு உதாரணம். என் சொந்தத்தில் ஒரு மாமா உண்டு. துச்சாதனனைப்போலவேதான். அவருக்கும் கருப்பான பெரிய உடம்பு. பெரிய மீசை. மிகப்பெரிய அடிதடி ஆள். போலீஸில் இருந்ததனால் ஜெயிலுக்குப் போகவில்லை.  ஆனால் அறிவு கிடையாது. பெரிய ஆபீசர்களின் அடிமை. ஆனால் அவருடைய மனைவி எங்களுக்கு நேர் சொந்தம். மிகமிக நல்லவர்கள். அவர் மனைவியின் நல்ல தன்மையை அறிந்திருந்தார். ஆகவே பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை மனைவிக்கே அளித்திருந்தார். பிள்ளைகள் மிக நல்லவர்கள் என்பதில் பெருமையோடு இருப்பார்.மனைவிமேல் மிகவும் மரியாதை கொண்டவர். மகன் ஒரு பைக் விபத்தில் இறந்ததும் அப்படியே உடைந்து போய்விட்டார். அவர் செய்த பாவங்களுக்கான தண்டனை அது என நினைத்துவிட்டார். அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. எட்டு மாதத்தில் அவரும் இறந்துவிட்டார். சில கெட்டவர்கள் நல்லவற்றை புரிந்துகொள்கிறார்கள். மதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் இயல்புப்படி இருக்கிறார்கள். துச்சாதனன் அத்தகையவன்

செல்வ கணேஷ்