அன்புள்ள ஜெ
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் சாத்தியங்களைக் கொண்டு மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் இந்நாவலில். நாலைந்து நாவல்களில் துச்சாதனன் வெறும் நிழல்தான். ஏனென்றால் அவன் பேச வாய்ப்பில்லை. அவன் மனம் ஆழமானது அல்ல. எதையும் உணர்பவனும் அல்ல. ஆனால் போர்க்களம் எல்லா மனங்களைக் கொண்டும் உண்மை உணரச்செய்கிறது. அவனுக்கு மூதேவியின் அமுதம் கிடைக்கிறது. இருட்டு வழியாக துக்கம் வழியாக அவனுக்குரிய ஞானம் கிடைக்கிறது
இந்நாவலில் துச்சாதனன் கொள்ளும் உச்சம், அவன் ஆதரவில்லாமல் தன் மகன் மரணத்தை எண்ணிக்கொள்ளும் அந்த பரிதவிப்பு மனதை உருக்குகிறது. அவன் மிகமிக naive ஆனவன். ஆகவேதான் அத்தனைபேர் செத்த களத்திலும் தன் மகன் காப்பாற்றப்படவேண்டும் என்று கோருகிறான். அதை அவனுடைய தம்பிகளும் மகனும்கூட உணர்ந்திருக்கிறார்கள்.
சரவணன்