அன்புள்ள ஜெ
இந்த குருஷேத்திரப்போர்க்களத்தை நீங்கள் ஒரு தீக்களம் ஆக உருவகம் செய்திருக்கிறீர்கள். இங்கே வந்த அனைவருமே உருகி உருவம் அழிகிறார்கள். பலர் பொசுங்கி மறைகிறார்கள். பலர் எலும்பு மட்டுமாக எஞ்சுகிறார்கள். இந்த உச்சகட்டக் களத்தில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் உருவம் மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் சிறப்பான அனுபவம்சி
அதில் துரோணர் மாறிக்கொண்டே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவருடைய மாற்றம் ஒரு தந்தை என்ற நிலையிலும் உடனே பிராமணன் என்ற நிலையிலும் உடனே மீண்டும் ஒரு ஆசிரியன் என்ற நிலையிலும் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் அவர் ஒவ்வொரு மாதிரி இருந்துகொண்டிருக்கிறார்
அது ஆச்சரியம் என்றாலும் மனிதர்கள் அப்படித்தான். ஒற்றைப்படையாக உறுதியாக இருப்பவர்கள் சிலர்தான். மற்றவர்கள் ஒன்றுக்குமேல் பெர்சனாலிட்டி கொண்டவர்கள். அவற்றை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள்.
ஜெயராமன்