Wednesday, March 20, 2019

அம்புகள்




அன்புள்ள சார்,

வண்ணக்கடல் அத்தியாயத்தில் அக்னிவேசர் துரோணரிடம் அம்பு என்றால் என்ன எனக்கேட்க துரோணர் அம்பு என்பது புல் என்று சொல்வார். அக்னிவேசர் இறக்கும் தருவாயில் அதை உணர்வார். 

அக்னிவேசர் “அதை நான் இப்போதுதான் முற்றிலும் புரிந்துகொண்டேன். வில் என்பது ஒரு புல் மட்டுமே என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம் என்றும்…” பெருமூச்சுடன் “ஆம்” என்றபின் அக்னிவேசர் புன்னகைசெய்தார்

உணர்வார் அதன்பின் துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியர் ஆகும்போது அவனிடம் அதே கேள்வியை கேட்பார். அப்பொழுது அவன் அதை "சொல்" என்று சொல்வான். அதன்பிறகான உரையாடலில்  அவரும. அதை ஏற்று மறுசொல் உரைக்கிறார்..

“வில் என்பது ஒரு சொல். அம்பு என்பதும் சொல்லே. மிகச்சரியான முழுமையான சொல்லை அடைந்துவிட்டால் நம் கல்வி முடிந்தது. சொல்லை கையில் இருக்கும் மூங்கிலிலோ தர்ப்பையிலோ நிகழ்த்துவது என்பது மிகமிக எளிய செயல். அந்தத் திறனை ஒரே வருடத்தில் அடைந்துவிடலாம். ஆனால் வாழ்நாளெல்லாம் தவம்செய்தே சொல்லில் முழுமையை அடையமுடியும்”

அஸ்வதாமன் என்ற சொல்லுக்கு வில் நழுவி நின்று இறக்கையில் அவரும் உணர்ந்திருப்பார் அம்பு என்பது வெறும் சொல்லே என...

இரண்டையும் சேர்த்து வாசிக்கையில் ஆசிரியர்கள் விட்ட இடத்திலிருந்து அவர்களின் முதன்மை மாணவர்கள் முன்னெழுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

அன்புடன்,
R.காளிப்ரஸாத்