Saturday, March 2, 2019

ஆக்கமும் அழிவும்




பூரிசிரவஸை அவன் குடியைக் காக்கவந்த ஒரு அவதார புருஷனாகவே வெண்முரசு இதுவரைக் காட்டிவந்தது.அவன அந்த நாட்டை வல்லரசாக்க முயல்கிறான். பால்ஹிகக்கூட்டமைப்பை உருவாக்க எண்ணுகிறான். அஸ்தினபுரியுடன் உறவு வைத்துக்கொண்டு அந்நாட்டை கோட்டை கட்டி பெரிய அரசாக ஆகிறான். அவனுடைய கனவுகள் வந்துகொண்டே இருந்தன. இன்றைக்கு அவனுடைய இறப்பின் போது அவன் தந்தையும் உடன்பிறந்தானாகிய பூரியும் எண்ணுவது வருகிறது. அவன் உண்மையில் தன் குடிக்கு அழிவையே உருவாக்கினான். ஆக்கம் அழிவு எதுவும் மனிதர்களின் கையில் இல்லை. வரலாற்றை மனிதர்கள் உணரவே முடியாது

ராஜசேகர்