Sunday, March 3, 2019

நாடுகளாவது..



ஜெ

சோமதத்தரின் நினைவுகளின் வழியாக அழகிய மலைநாடான பால்ஹிகம் எப்படியெல்லாம் நாகரீகம் நோக்கிச் சீரழிந்தது என்று பார்க்கையில் வேறு ஒரு சித்திரம் மனதில் வந்துவிட்டது. இன்றைக்கு உலகிலுள்ள பல அழகான வாழ்க்கை கொண்ட நாடுகள் உலகமயமாக்கலால் அழிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தச்செயல்பாடு வரலாறு முழுக்க நடந்துகொண்டுதான் இருக்கிறது. வெண்முரசிலேயே ஒவ்வொரு நாடாக இப்படி வந்து மைய ஓட்டத்தில் புகுந்து அடையாளமில்லாமலாவதை சொல்லிக்கொண்டே வந்திருக்கிறீர்கள். பீஷ்மரின் கங்கர் குலம் இதேபோல ஒரு தலைமுறைக்கு முன் மைய ஓட்டத்துக்கு வந்து சாதிகளாக மாறி அழிவதன் சித்திரம் முதலில் வந்ததை ஞாபகப்படுத்திக்கொண்டேன்

பாஸ்கர்