அன்புள்ள ஜெ
போரின் காட்சிகள் வரத்தொடங்கி இரண்டாயிரம் பக்கம் கடந்திருக்கும் என நினைக்கிறேன். இப்போதும் புதிதுபுதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.ஆசிரியர் மாணவர் போர் கூட முன்னரே வந்துவிட்டது. ஆனாலும் அர்ஜுனனுக்கும் துரோணருக்குமான போர் ஓர் ஆச்சரியம். அர்ஜுனன் விடும் அம்புகள் அத்தனையும் அவரிடமிருந்து பெற்றவை, அவன் திரும்பக்கொடுக்கிறான். முற்றாக அம்புகள் இல்லாமலாகிவிடுகிறான் என்பது அபாரமான கற்பனை. அவன் அவர் தொட்டுக்கொடுத்த முதல் அம்பிலிருந்து ஆரம்பிக்கிறான். ஆசிரியர் மாணவர் உறவு அதிலுள்ள பகைமை ஆகியவற்றைப் பற்றிய ஒரு நீண்ட கவிதையாகவே இருந்தது இந்த அத்தியாயம்
ஜெயராமன்