Monday, March 4, 2019

அண்ணன்



அன்புள்ள ஜெ

விகர்ணனை சிதையேற்றம் செய்யும்போது துரியோதனன் அடையும் குழப்பமும் கொந்தளிப்பும் ஆழமானவை. உண்மையிலேயே விகர்ணனை எங்கே எரிப்பது என்பது பெரிய கேள்விதான். அவன் கௌரவனா என்றால் கௌரவர்களில் ஒருவன் அல்ல.எப்போதும் தனியாக இருக்க விரும்பியவன் அவன் கௌரவர்களை விட்டுப்போகவுமில்லை. யுயுத்சுவைப்போல. அவனை தன் உடன்பிறந்தாரைவிட்டுப் பிரிக்க முடியாது

அவனை எரியூட்ட யுயுத்ஸு வந்திருந்த நிகழ்ச்சி ஒரு நெகிழ்ச்சியை உருவாக்கியது. அதைவிட யுயுத்ஸுவின் பத்திரம் பற்றி துரியோதனன் கவலைப்படுவதும் அவனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என நினைப்பதும் அவன் போர்க்களத்திற்கு வரவேண்டியதில்லை என ஆணையிடுவதும் கண்களைக் கலங்க வைத்தன. துரியோதனனைப் போல ஓர் அண்ணன் கிடையாது என்று எங்களூரில் பாரதக்கூத்தில் சொல்வார்கள். ராமனும் தருமனும்கூட அண்ணன் என்ற வகையில் துரியோதனனைவிட ஒருபடி கீழேதான் என்பார்கள். அதை கண்ணெதிரே காட்டிவிட்டது வெண்முரசு

ராம்குமார்