Saturday, March 2, 2019

சாவுகள்




மரணத்தைச் சந்திப்பது ஓர் உச்சம். அந்த விளிம்பில் மனம் தீயை அருகே செல்லுவதுபோல பலவகையாக எதிர்வினையாற்றுகிறது. குருக்ஷேத்திரம் மரணக் களம். ஆகவே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாவனைகளைக் களைந்து தங்களை உண்மையாக நேருக்குநேராகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் உலாவுகிறார்கள்.

அதில் சோமதத்தரின் உச்சம் ஒரு தனித்துவம் கொண்டது. ஏற்கனவே இதேபோன்ற ஓர் உச்சத்தை சாத்யகியிலும் கண்டோம். மகன்கள் செத்துபோன்ன சோமதத்தரின் வெளிப்பாடு அதிலிருந்து முழுமையாகவே வேறுபட்டிருக்கிறது. விராடர், துரியோதனன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்வினை செய்கிறார்கள் என நினைக்கிறேன். சோமதத்தர் கொந்தளிப்பதும் கனவில் அவர் அடையும் மகிழ்ச்சியும் மர்மமானது. தெய்வங்கள் வந்து அவரை அமைதிப்படுத்துகின்றன. தோசைக்கல் ரொம்பவும் சூடானால் நீர் தெளிப்பதுபோல என்று எனக்குத்தோன்றியது

சாரங்கன்