Monday, March 11, 2019

தீமை எழுதல்



ஜெ

துச்சாதனனிடம் இருக்கும் குழந்தைத்தன்மை வெளிப்பட்ட அந்த அத்தியாயத்திலேயே அவன் பெருந்துயர் அடைகிறான். அவனுடைய கதாபாத்திரம் அந்த உச்சத்துடன் முடிகிறது. இனி நேராகச் சாவுநோக்கிச் செல்லவேண்டியதுதான். அவனுடைய கதாபாத்திரம் இந்த ஓர் அத்தியாயத்தில் ஒரு குழந்தையாக வெளிப்படுகிறது. அவன் குழந்தை ஆகவேதான் பிறரிடமிருக்கும் எல்லா இயல்புகளையும் அவன் கொண்டிருக்கிறான். அவன் தன் பிம்பங்களையே விரும்பிப்பார்ப்பது ஒரு அடையாளம். அவனால் தான் யார் என்பதையே முடிவுசெய்துகொள்ளமுடியவில்லை.

மைந்தன் இறந்தபின் தானும் சீக்கிரம் சாகவேண்டும் என அவன் விரும்புகிறான். பிறகு போருக்குப்பின் வாழ்பவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள் என நினைக்கிறான். அவனுடைய அத்தனை பழிபாவமும் இந்த இடத்தில் அகன்றுவிடுகிறது. அவன் தூயவனாகவே சாகிறான்


மகாதேவன்