அன்பின் ஜெ,
வணக்கம்!.
//
பிறிதொன்றினால் துயருறுகிறேன். துயரல்ல, சீற்றமும் கொள்கிறேன். அல்ல, இது பிறிதொன்று. இது ஓர் ஏமாற்றம். அல்ல, அதுவும் அல்ல. வெறும் கசப்பு. எவர் மீதென்றிலாத கசப்பு.
//
கார்கடலின் இன்றைய(11-மார்ச்) அத்தியாயத்தில் துரோணரை சந்தித்து புரவியில் திரும்பும் அஸ்வத்தாமனின் உளப்பதிவு.
மனப்பதிவுகளை வார்த்தைகளாய் வடிக்கும் நிகழ்வுகள் முடிவிலா சக்கரசுழற்சியாய் நிகழ்ந்துகொண்டிருக்கும் வெண்முரசில், இதுபோன்ற உளப்பதிவுகள், உணர்வை மிக அணுக்கமாக கடத்திவிடுகிறது.
-யோகேஸ்வரன் ராமநாதன்.