ஜெ,
மதுரைப்பகுதி மறவர்கள் கூலிக்காகக் கொலைசெய்யச் செல்லும்போது
கோபத்தை வரவழைத்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கொல்லவேண்டியவன்
மேல் வண்டியைக் கொண்டுசென்று மோதுவார்கள். அவன் கெட்டவார்த்தை சொல்லும்போது திட்டுவார்கள்
. அவன் கெட்டவார்த்தை சொல்வான். அவமானமாகப்பேசுவான். அல்லது அடிக்க வருவான். இவர்களுக்குகோபம்
தலைக்கேறும். அந்தக் கோபத்தில் இவர்கள் வெட்டுவார்கள்.
வெண்முரசில் கர்ணனைப்போன்றவர்கல் எதிரியை திட்டி கேவலப்படுத்தி
அவர்கள் தங்களைத் திட்டவைத்து கோபத்தை உண்டுபண்ணி போர் செய்கிறார்கள். அதே மனநிலைதான்
என்று தோன்றுகிறது
சா. திரவியம்