அன்புள்ள ஜெ
துரோணர் அர்ஜுனன் போரைப்பற்றி வாசகர் எழுதியிருந்ததை வாசித்தேன். அது ஆசிரியர் மாணவர் உறவைப்பற்றிய அற்புதமான கவிதை. கொடுத்தவற்றை எல்லாம் திரும்பக்கொடுத்து மிச்சமிருப்பதன் வழியாகவே மாணவன் மீளமுடியும்.
ஆனால் அந்த அத்தியாயத்தில் இரண்டு மர்மங்கள் உள்ளன. ஒன்று அர்ஜுனனின் ஆவநாழியில் இறுதியாக எஞ்சிய அந்த அம்பு எது?
இரண்டு ஏன் அஸ்வத்தாமனின் பெயரைக் கூவும்படிச் சொன்னார் கிருஷ்ணன்?
சாரங்கன்