Sunday, March 10, 2019

மாயங்கள்



ஜெ

இந்தப்போர்க்களத்தில் விதவிதமான கனவுகளும் மனப்பிறழ்வுகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இரண்டுவகையான கனவுகள் அவை. கதைசொல்லிக்கு உருவாகும் பிறழ்வுகள். கதைமாந்தருக்கு உருவாகும் பிறழ்வுகள். கதை மாந்தர் சாவைச் சந்திக்கும்போதுதான் அந்தப்பிறழ்வை அடைகிறார்கள். எல்லா கதைமாந்தரும் அடையும் பிறழ்வுகளை ஒருவர் தனித்தனியாகப் பட்டியலிட்டு தொகுத்தால் ஒரு பெரிய சித்திரம் உருவாகி வரும் என நினைக்கிறேன்.

அதில் உச்சகட்டம் என்பது பீமனுக்கு சின்னக்குழந்தையாக கடோத்கஜன் தோன்றுவதுதான். அந்த கடோத்கஜனை நமக்கும் தெரியும் என்பதனால் நாம் உள்ளம் நெகிழ்ந்துவிடுகிறோம். மண்டையன் என்னும் அழைப்பு நெஞ்சை உருக வைக்கிறது

ஆர். சத்யமூர்த்தி