ஜெ
தோல்வியை உணர ஆரம்பித்தபின்னர் கௌரவப்படைகளுக்குள் வந்தும்
கசப்பும் ஒருவருக்கொருவர் அவர்கள் வெறுப்புடன் வசைபாடி பூசலிடுவதும் நிதர்சனமான வாழ்க்கையைக்
காட்டின. இப்படி மூலத்திலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஒரு தொழிலில்
நஷ்டம் வர ஆரம்பிக்கும்போதுதான் அதில் ஈடுபட்டிருக்கும் அத்தனைபேரும் கடுமையாக பூசலிடுவார்கள்.
குவாரலிங் ரேட்ஸ் இன் த சிங்கிங் ஷிப் என்று நாங்கள் சொல்வோம். எலிகள் மூழ்கும் கப்பலில்
ஒன்றை ஒன்று கடித்துக் குதறுமாம்
பழியை தங்கள்மேல் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதுதான்
முக்கியமான காரணம். அதைவிட முக்கியமாக எந்த
எதிரியிடம் கோபம் கொள்வது என்று தெரியாது. விதிதான். அதை எங்கே சொல்வது? ஆகவே எதிரில்
நிற்பவர்களிடம் காட்டுகிறார்கள். அஸ்வத்தமான் கர்ணனை கடுமையாக வசைபாடுகிறான். துரியோதனனே
எல்லாரையும் வசைபாடுகிறான். கூண்டோடு அழியப்போகிறோம்
என எல்லாருக்குமே தெரிந்துவிட்டதுதான் காரணம்.
எஸ்.எம்.தனபால்