Friday, March 22, 2019

நட்பும் பகையும்



அன்புள்ள ஜெ

வெண்முரசில் திருஷ்டதுய்ம்னனும்  சாத்யகியும்  ஒருவரை ஒருவர் நிந்தித்துக்கொள்கிறார்கள். அது ஏன் என நமக்குப்புரிவதில்லை. மூலத்திலும் அவ்வாறே நிந்தனை செய்துகொள்கிறார்கள். அதற்கு கொஞ்சம் முன்புதான் திருஷ்டதுய்ம்னனை சாத்யகி உயிர் கொடுத்து துரோணரிடமிருந்து காப்பாற்றியிருப்பான். ஏன் இது நிகழ்கிறது என்பது புரிவதில்லை. ஆனால் இப்போது ஒரு தெளிவு உள்ளது. அது ஒரு நாடகம். அவர்கள் தங்கள் குற்றவுணர்ச்சியை அதன் வழியாகக் கடந்துசெல்கிறார்கள். அந்த நஞ்சை மாறி மாறி உமிழ்ந்ததுமே ஆறுதல் அடைகிறார்கள். ஒரு இழப்பு வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வார்கள். அதன்பின்னர் 'சரி ஏதோ நடந்துபோச்சு' என்று சமாதானம் ஆவார்கள். அந்த உத்திதான் இது.

சுவாமி