Sunday, March 3, 2019

அழுக்கு




ஜெ ,

சில இடங்களில் போர் பற்றிய வர்ணனைகள் அப்படியே யோகம் பற்றிய வர்ணனைகளாகவே ஆகிவிடுகின்றன.  ஆகவேதான் குருக்ஷேத்திரம் யோகபூமி என்றும் ஞானபூமி என்றும் சொல்லப்படுகிறது. கீதை அது தார்மக்ஷேத்திரம் என்று சொல்கிறது.  இன்று இந்த வரிகளை ஒரு மந்திரம்போல வாசித்தேன்

சினமும் உடலில் இருந்து ஒருவகை வெளியேற்றம் மட்டுமே. ஐந்து உடல்மலங்களைப்போல நுண்ணுருக்கொண்ட ஒன்று. வெளியேறும் மலம் உடலை தூய்மைப்படுத்துகிறது. வெளியேறவேண்டும் என்னும் அதன் துடிப்பே உந்துதலாக ஆகிறது. எத்தனை வெறியுடன், விசையுடன் அது உடலைவிட்டு நீங்குகிறது! வில்லில் இருந்து எழும் அம்புகளைப்போல. மலத்தை உமிழ்கிறது உடல். மலத்தை வீசியடிக்கிறது. மலம் உடலுக்குரியது அல்ல. அதை உடலைவிட மலம் நன்கறிந்திருக்கிறது. அது மண்ணுக்குரியது. மண் அதை மீண்டும் அமுதெனச் சமைக்கிறது. மலம் இழந்த உடல் வெறுமையை அல்ல நிறைவையே உணர்கிறது. மலமிருந்த இடத்தில் வந்தமைவது உடலுக்குள் வாழும் இனிமைகள். ஆகவேதான் மலவெளியேற்றம் மானுட உடலின் இன்பங்களில் ஒன்றென அமைந்திருக்கிறது.

சத்யமூர்த்தி