அன்புள்ள ஜெ
பூரிசிரவஸின் முடிவு அவன் அறிமுகமானபோதே உணர்த்தப்பட்டுவிட்டது. அவன் கைகள் வெட்டப்படுவதைக் கனவு காண்கிறான்.அவனும் சாத்யகியும் சந்திக்கும்போதே அவனுடைய இணையான மறுபக்கம் அவன் என்பது தெளிவாகிவிடுகிறது. அவர்களை விதி ஒன்றாகக் கட்டியிருக்கிறது. மெல்லமெல்ல அவன் அதைநோக்கிச் சென்றுகொண்டிருந்தான். ஆனாலும் அவனுடைய இறப்பும் அவன் எரியூட்டப்பட்ட விதமும் ஆழமான ஒரு பாதிப்பை உருவாக்கின. அவனுக்காக இரண்டும் படைகளுமே வருந்துகின்றன
ஆனால் சாத்யகியிடம் எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் அவன் மைந்தரை இழந்த கசப்பில் இருக்கிறான். ஆகவே அவனுக்கு எல்லாமே சரி என தோன்றுகிறது. இந்த களம் முழுக்க ஒன்று தெரிகிறது. மண்ணாசை கொண்டவர்கள் நிதானமாக இருக்கிறார்கள். இதைப்போல வஞ்சம் கொண்டவர்கள்தான் எதற்கும் தயாரானவர்களாகத் தெரிகிறார்கள் பாசம் என்ற நல்ல உணர்வுதான் சாத்யகியை கீழ்மகனாகவே ஆக்கிவிட்டது
சங்கரநாராயணன்