பிறை அம்பு என்பது, நாங்கள் கற்பனை செய்திருந்தது போல் விரிந்த முனை (concave) கொண்டது அல்ல, கூம்பிய முனை (convex) கொண்டது என கூறி இருந்தீர்கள்.
ஹார்வர்ட் கலை அருங்காட்சியகத்தில் நீங்கள் கூறும் வகை அம்புமுனை காட்சிக்கு உள்ளது.
https://www.harvardartmuseums. org/art/304580 பைசான்டியம் பகுதயை
சேர்ந்தது.
ஆனால், அவை மேற்கில் பிரபலமடையவில்லையோ என்னவோ. இந்த வகை அம்பு குறித்து தகவக்கள் அதிகமாக இல்லை.
swallowtail எனப்படும் கூரிய முனை கொண்ட அம்புமுனைகள் குறித்து நிறைய தகவல்கள் காண கிடைக்கின்றன.
.
இவை பெரிய விளங்குகளை வேட்டையாட உபயோகப்படுத்தப்படுபவை.
இணையத்தில் உள்ள அம்பு முனை குறித்த தகவல்களில் 99% மேற்கத்திய சேகரிப்பாளர்களால் / சேகரிப்பாளர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. விலங்க்கு வேட்டை சார்ந்தே வர்ணனைகளும் உள்ளன.
அவர்கள் பிறையம்பு என்றால் இதைதான் https://finds.org.uk/ database/artefacts/record/id/ 114970 குறிப்பிடுகிறார்கள்
ஒருவர், இவ்வகை பிறையம்பு பறவையை வேட்டையாட சரிபட்டுவருமா என செயல்முறை ஆராய்சி செய்து இங்கு http://markstretton.blogspot. com/2016/01/the-power-of- warbow-on-flesh-and-bone.html பதிந்துள்ளார்.
இரண்டு வகை பிறையம்புகளுமே (swallotail, crescent) சுழன்று செல்பவை. இலக்கில் இருந்து சரியான தொலைவில் இருந்தால் அவை இலக்கை நேராக சென்று வெட்டும்.