Wednesday, March 13, 2019

கலி




அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடலின் 76ம் அத்தியாயத்தில்  திருஷ்டத்யும்னன் விராடர். துருபதர் இறந்த செய்தியை கேட்டு நாக்கு கசந்து வாந்தி எடுத்து சுற்றி வருகிறானே ஏன்? நாகவேததின் கசப்பா?  துரியோதனன் மட்டும் கலிக்கு தன்னை அர்ப்பணித்தவன் அல்ல. கலி என்று ஓன்று புதியதும் அல்ல...அது மனிதம் தோன்றியது முதலே இருக்கிறது. அதை வழிபடும் ஆத்மாக்கள் கூட கூட அது முதன்மையாகி மனிதர்களை வழிநடத்தி செல்ல ஆரம்பிக்கிறது. எண்பது ,தொண்ணுறுகளில் பார்த்த உலகம் அல்ல இன்று நாம் காண்பது. துருபதர் அதர்வ வேதம் கொண்டு பெற்றெடுத்தவர்கள் பாஞ்சாலி , திருஷ்டத்யும்னன். இருவரும் கருப்பு. துரியோதனன் கலியின் ஆண்வடிவம் என்றால் பாஞ்சாலி கலியின் பெண்வடிவமா?  ஆதலால் தான் இருவருக்குள்ளும் இவ்வளவு வஞ்சமா? அப்படியென்றால் கலியுலகின் ஒருவருக்குள் இருக்கும் ஆண் பெண் இரண்டும்  வெறும் வஞ்சம் தானா? பிறகு ஏன் தமிழ்நாட்டில் எல்லாரும் வெள்ளையாக ஆசைபடுகிறார்கள்?  மனதில் இருக்கும் கலியின் கருப்பை தோலால் மூடவா?  இப்போதே பிறக்கும் குழந்தைகளின் நிறம் வெள்ளையாக தொடங்கி இருக்கிறது. கொளுகொளுவென இருக்கிறார்கள். அனைத்து தோல்களும் வெள்ளையானால் அந்த யுகத்தின் பெயர் என்ன?  வெள்ளை தோல்களை எண்ணி மனம் நடுக்கம் கொள்கிறது... ..அவர்களால் அனுபவித்து இருப்பதினால் எனது நாக்கிலும் கசப்பு ஊறுகிறது. 
திருஷ்டதுய்மனன் "தந்தை பிறர் அறியாத கொடுந்தெய்வங்களுக்கு பலிபூசனை செய்துகொண்டிருந்த காலம் அது. எழுயுகத்தின் தலைத்தெய்வமாகிய கலியின் பெண்வடிவமான கலிகையின் ஆலயம் அது என்று மிகப் பின்னர் அவன் அறிந்துகொண்டான்.கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்ட நீள்வட்ட வடிவமான அந்த ஆலயத்தின் கருவறைக்குள் கலிகை முழங்காலளவு உயரமான கரிய கற்சிலையாக அமர்ந்திருந்தாள். காகக்கொடியும் கழுதைஊர்தியும் வெறித்த கண்களும் சொல்லொன்று எழும்பொருட்டு சற்றே திறந்த உதடுகளுமாக. அந்த வெறிப்பில் ஒரு புன்னகை இருப்பதாகத் தோன்ற அவன் நடுங்கி அருகே நின்றிருந்த இளைய தந்தை சத்யஜித்தின் ஆடையை பற்றிக்கொண்டான். அவர் தன் கைகளால் அவனை முழங்காலொடு சேர்த்து “வணங்குக, மைந்தா!” என்றார். அவன் கைகூப்பி வணங்கியபின் விழிமூடிக்கொண்டான் என்று தனக்குள் நினைத்துகொள்கிறான். திருஷ்டத்யும்னன் ஏன் அப்படி பயப்படுகிறான்? துருபதன் ஏன் கலி தெய்வங்களை எழுப்புகிறார்? துரோணர் மேல் அவ்வளவு வஞ்சமா? இல்லை...அவர் வரலாற்றின் ஒரு கருவி அவ்வளவுதான்......அந்த பெண் கலி யார்? அவ்வளவு கொடுந்தெய்வங்கள் அப்போதே இருந்தனவா? இருந்திருக்கவேண்டும் ...இல்லை என்றால் சிந்து சமவெளி நாகரிகமும் , எகிப்திய பிரமிடுகளும் எப்படி எழுப்பபட்டிருக்கும்?
அந்த ஆலயத்திற்குச் சுற்றும் நூற்றெட்டு பெருஞ்சிலைகள் இருந்தன. அவர்கள் கலிகை அன்னையின் ஊர்திகளென மண்ணிலெழப்போகும் அரசர்கள் என்று அமைச்சர் சுமந்திரர் சொன்னார். அவர்கள் கலிதேவனின் படைத்தலைவர்கள். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு விரல் முத்திரை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றென்றும் இரண்டென்றும் மூன்று என்றும். பேரழிவென்றும் வெறுமையென்றும், அனலென்றும் புனலென்றும். ஆனால் அனைத்து விழிகளும் வெறித்து உள்ளிருக்கும் மையத்தெய்வத்தின் அதே ஏளன நகைப்பை கொண்டிருந்தன. ஒவ்வொரு முகத்திலும் அந்தச் சொல் இருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான்....அந்த நூற்றெட்டு பெரும் சிலைகள் தான் இன்றைய உலக நாடுகளின் தலைவர்களா? எல்லார் முகத்தை பார்த்தால்  கலியின் மைய தெய்வத்தின் நகைப்பையே வெறியாய் கொண்டிருக்கிறார்கள். பால் வழிவது போன்ற முகம் கொண்ட ராகுல் காந்தியின் முகம் கூட மாறிவிட்டது. இப்போது நான் எண்ணுவது போல் தான் களப்பிர, சேர,சோழ ,பாண்டிய ,முகலாய , ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் சாதாரணமானவன் எண்ணிகொண்டு இருந்திருப்பானா? 

திருஷ்டத்யும்னன் “இடும்பனின் வீழ்ச்சி நம் படைகளை சோர்வடையச் செய்துள்ளது” என்றான். இளைய யாதவர் “அல்ல. நம் தரப்பு ஷத்ரியர்கள் இன்றொரு நாள் கடந்தால் உளம் தேர்வார்கள். இன்றைய போரில் இங்குள்ள ஷத்ரியர் எவருக்கும் அவன் ஈடல்ல என்பதை அவன் காட்டிவிட்டான். அவன் வாழ்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என அவனை அமரச்செய்யவேண்டும் என்னும் குரல் எழும். அவன் அதை விரும்பாது தன் நகருக்கே மீண்டால்கூட நாளை அவன் கொடிவழியினர் அவ்வாறு எழக்கூடும். இப்போரால் எழவிருக்கும் யுகத்தில் அரக்கர்கள் முதன்மை கொள்வார்களோ என்று ஷத்ரியரும் அந்தணரும் யாதவரும் ஐயம் கொண்டிருப்பார்கள். அரக்கர்களை நிகர்செய்யும் ஆற்றல் என்ன என்பதை இவ்விறப்பு காட்டியிருக்கிறது. இனி அவர்கள் உளம் அமைவார்கள்” என்றார். அரக்கவேதத்தை நாக வேதம் வென்று வீழ்த்தி முன் செல்கிறது. 

திருஷ்டத்யும்னன் நீள்மூச்செறிந்து “எழவிருக்கும் யுகத்தில் ஆளப்போகிறவர் எவர்?” என்றான். “கலியுகத்தில் கூட்டே வல்லமை எனப்படும்” என்றார் இளைய யாதவர்.  ஆனால் தமிழ் நாட்டில் பிரிவினைவாதம் ஏன் இப்போது இப்படி ஓங்கி இருக்கிறது? ... நேருவும் அப்போது இதையே கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்