Thursday, March 14, 2019

தலைமை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 77ம் அத்தியாயம் அஸ்வத்தாமணும் துரியோதனனும் உரையாடிகொள்வது டீம் லீடரும் மேனேஜரும் உரையாடி கொண்டிருப்பதாகவே எனக்கு பட்டது. சென்னையில் அனைத்து வியாபார, சேவை துறைகளில் இருப்பவர்கள் தினமும் கேட்கும் உரையாடல்.  நித்ரா தேவியினால் சூழ ஆட்கொள்ளபட்டிருக்கும் களைத்த படைகளை இன்று போருக்கு தயார் படுத்தவேண்டாம் என அஸ்வத்தாமன் கூற  துரியோதனன் "இதை நீங்கள் சொல்வீர்கள் என எனக்குத் தெரியும். என் கனவு எழுந்தபோதே நான் உணர்ந்தேன், என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அனைத்தும் முடிந்துவிட்டதென்ற எதிர்நம்பிக்கையை பிற அனைவரும் அடைந்துவிட்டார்கள் என்று. இவ்வெற்றி எனது நம்பிக்கையால், எனது தளரா ஊக்கத்தால், என் தெய்வத்தின் அருளால் மட்டுமே அடையப்படுவது. இன்று வெற்றியை காண்பீர்கள். ஐயம் வேண்டாம்”“உத்தர பாஞ்சாலரே, இன்று முழு வெற்றி நிகழும். இச்சோர்வும் பின்னடைவும் உளத்தளர்வும் நம்பிக்கையிழப்பும் அனைத்தும் இன்றைய வெற்றியை நோக்கி நாம் செல்வதற்காகவே. தெய்வங்கள் நமது இறுதி எல்லையை காட்டுகின்றன. இதிலிருந்து எழுவாயெனில் வெற்றி உனக்கல்லவா என்று என் தெய்வம் என்னிடம் சொல்கிறது. எழுந்து காட்டுகிறேன். இன்று என் தெய்வத்தின் முன் நின்று காட்டுகிறேன். இன்று போர் நிகழ்ந்தாகவேண்டும். இப்பொழுதே என் படைகள் எழுந்தாகவேண்டும்” என்கிறான். இப்படி பேசாவிடால் மேனேஜர் மேனேஜராக இருக்க முடியாது. டீம் லீடர் டீம் லீடராக இருக்க முடியாது. இப்போது "SATURDAY NIGHT FEVER" கூட கொஞ்சம் குறைந்து தூக்கத்திலேயே SATURDAY யிலும் வேலை செய்து எதிர்ப்பை ஸ்விக்கி அல்லது ஊபரில் சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு அவர்களிடம் காட்டிக்கொண்டு இருக்கிறோம். 


சகுனி “துயிலரசி உள்ளத்தை மட்டுமே ஆளமுடியும். உடல்களை உலுக்கி எழுப்புவோம்” என்றபடி சகுனி எழுந்தார். காலின் வலி முகம் சுளிக்க வைக்க துரியோதனனின் தோளைப் பற்றியபடி நின்று “தென்கிழக்குக் காவல்மாடங்களின் அருகே மேலும் நான்கு காவல்மாடங்களை இழுத்து வைப்போம். காவல்மாடத்திலிருந்து எரியும் மிளகுத்தூளை அக்காற்றில் கலந்து வீசுவோம். ஒவ்வொருவரின் மூக்குக்குள்ளும் அது சென்று அவர்களை தும்ம வைக்கும். உடலை உலுக்கி எழுப்பும். அப்போது நமது போர்முரசு ஒலிக்கட்டும்”என்று கூறியபோது சரியான ஐடியாவாக இருக்கிறதே என மனம் வியந்தது. ஜெயமோகன் சார், இன்று நூற்றுக்கு தொண்ணூறு சதவீதத்தினர் தூங்கியபடிதான் வேலை செய்துகொண்டிருக்கிறோம். LOAN, E.M.I. RENT என்று மாதாமாதம் எரி மிளகு பொடி வீசப்படுவதினால் தான் போர்க்களத்தில் இருக்கிறோம். ஆதலால் சகுனி கூறியதை கேட்டு ஆச்சரியம் இல்லை. உண்மையில் அப்படி மிளகு வீசபடவேண்டும். இல்லை என்றால் பொங்கலையும் பூரியையும் சாப்பிட்டு விட்டு தூங்கிவிடுவோம். ஜனங்களோடு புழக்கத்திலேயே இருக்கும் உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். ஆனால் அப்படி ஒரு தூக்கப்படைகளை கொண்டு வெற்றி பெற்றுவிடமுடியுமா? ஸ்டீவ் ஜாப்ஸ் வேறு மனக்கண் முன் வந்து நிற்கிறார். வரலாற்றில் எதுவும் நடக்கும் என்பது தான்  வெண்முரசை வாசித்து சுருக்கமாய் புரிந்தது. துரோணர் டீம் லீடர் பொறுப்பில் இருந்து தூக்கபட்டு சாதரணமாக இருப்பதற்கு செத்துவிடலாம் என்று நினைத்து தான் தியானத்தில் அமர்ந்தாரா? 

ஸ்டீபன் ராஜ்