அன்புள்ள ஜெ
நோயில் படுத்திருப்பவர்கள் சாவதற்கு கொஞ்சம் முன்னர் நோய் அகன்று மனத்தெளிவை அடைவார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். மனம் பேதலித்திருப்பவர்கள் தெளிவடைவார்கள். முகம் அழகாக ஆகிவிடும். கெட்டவர்கள் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள் .செய்த தப்புகளை எல்லாம் உணர்வார்கள். இதை நானே என் தாத்தா சாவின்போது பார்த்தேன். ஆனால் இன்றைக்கு கடுமையான மருந்துகளை அளித்து மருந்திலே மூழ்கி சாகவைக்கிறார்கள்.
வெண்முரசில் எல்லா கதாபாத்திரங்களும் சாவை நோக்கிச் செல்லும்போது ஒருவகையான மனமாற்றத்தை அடைகிறார்கள். தெளிவு உருவாகிறது. குருக்ஷேத்திரம் ஒரு யோகபூமி. அதனால்தான் அங்கே சாவே மெய்ஞானத்தை அளிப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. கடோத்கஜனின் மனம் மாற்றமும் மெய்யை உணர்வதும் இயல்பானதே
சாரங்கன்