வேதாந்த விசாரம்
மிக மிக அரிதாகவே பெண்களைக் கவர்கிறது. காரணம் அதிலுள்ள விரக்தி அம்சம் அவர்களை கவர்வதில்லை.
ஆனால் பிரேமையும் பக்தியும் அவர்களுக்கு ஆண்களை விட எளிதாகக் கைவருகிறது. கண்ணனிடம்
பாஞ்சாலி கேட்கும் கேள்வி இதுதான். ஜீவன்முக்தராகித்தான் நான் முக்தி அடையமுடியுமா?
என் பிரேமையால் முக்தியடைய முடியாதா? இது எப்போதும் எழுந்துகொண்டிருக்கும் கேள்வி.
ஆணின் ஆன்மிகத்திற்கும் பெண்ணின் ஆன்மிகத்திற்கும் இடையேயான வேறுபாடு இது. இந்தக்கோணத்தில்
எழும் கேள்வியுடன் அன்பு, காமம், அழகுணர்வு என்னும் அம்சங்களையும் இணைத்து எழுந்துள்ளது
இந்த அத்தியாயம்
மகாதேவன்