Friday, May 4, 2018

கதைச்சுழல்




ஜெ

திரௌபதியின் கதையை முழுமையாக வந்தபின்னர்தான் இன்னொருமுறை வாசிக்கவேண்டும். அழகு என்பது விழைவுதான். காமம்தான்.கேதுமாலன் கதை, மாயாசீதைக்கதை என்று விரிவாக சொல்லி அதை நிறுவியபின் அதிலிருந்து விடுதலையில்லை பெண்ணுக்கு. அவள் மோட்சம் அதிலேதான் என்று இமைக்கணம் சொல்கிறது. இந்தக்கதைகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாததுபோலத் தெரிகிறது. ஆனால் இணைத்துக்கொண்டால் திரௌபதியின் வாழ்க்கையையே விளக்குவதாகவும் தோன்றுகிறது. அவள் ஏன் இந்திரப்பிரஸ்த நகரைக் கட்டினாள் என்று கேதுமால நகரியின் கதைதான் புரியவைக்கிறது. அழகை நாடினேன் என்ற அவளுடைய அறிவிப்பு அதைத்தான் காட்டுகிறது. அழகுக்கு வேதாந்தத்தில் என்ன இடம் என்றும் அதற்கும் உண்மைக்கும் என்ன உறவு என்றும்தான் கிருஷ்ணர் சொல்லப்போகிறார்

ஜெயராமன்