ஜெ
வெண்முரசின் இந்நாவலில்
உள்ள அழகு இது கலைடாஸ்கோப் போல திரும்பிக்கொண்டே இருப்பதுதான். முன்னால்செல்கிறது பின்னால்
செல்கிறது. திரும்பியதும் எல்லாமே மாறிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக வேறு அர்த்தம் வந்துவிடுகிறது.
முற்பிறப்புகளும் மறுபிறப்புகளும் கலந்து ஒரே புள்ளியில் சுழல்கின்றன. அதில் உச்சம்
என்று நான் யுதிஷ்டிரன் ஜனமேஜயனின் மகனாகப்பிறப்பதைத்தான் சொல்வேன். அங்கே அமர்ந்து
ஏன் ஒரு துளிப் பகையை வியாசர் விட்டுவைக்கிறார் என்று அவன் ஆச்சரியப்படுகிறான். பராசரர்
செய்ததைத்தான் வியாசரும் செய்கிறார் என அவனுக்கு தெரியவில்லை. ஆனால் யுதிஷ்டிரனுக்குத்தெரிகிறது
ஜெயராமன்