Sunday, May 6, 2018

பிரார்த்தனைகள்


அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு

நலமாக இருக்கிறீர்களா? வெண்முரசு மிக அழகாகப்
போயகொண்டிருகிறது. சிறுவயதில் கேள்விப்பட்ட மகாபாரதக் கதைகள்
எல்லாம் நேர்த்தியாய் அதனதன் இடத்தில் அமைந்து கொள்கிறது.
குசேலன் கதையைப்போல். பெரிய அற்புதங்களோ, மாயங்களோ
இல்லாமல் யதார்த்தமாய் இருக்கிறது. ஆனாலும், இந்தக் கிருஷ்ணன்
இப்படி இருக்க வேண்டாம். மேலே ஒருவரும் இல்லையென்று
சொன்னால் இருக்கிறது என்று சாதிக்கிறார். மேலே ஆள் உண்டு என்று
சொன்னால் இல்லை என்று சாதிக்கிறார். மேட்டுக்கு இழுத்தால்
பள்ளத்துக்கு, பள்ளத்துக்கு இழுத்தால் மேட்டுக்கு.

நம் பிரார்த்தனைகள் சென்று சேர்கிற இடம் ஒன்றும் இல்லை என்பதே
மிக பயமான ஒன்றாய் இருக்கிறது. மேலே பார்த்துக் கூப்பிட்டால்
“என்னலே குருசே” என்று விளி கேட்கிற தெய்வம் உண்டு என்றே
ஒவ்வருநாளும் சொல்லிகொள்கிறேன். இருக்கும்தானே?

வாழ்த்துகளுடன்,
Daisy