Sunday, May 6, 2018

கதைக்குள் கதை




ஜெ

இமைக்கணம் கதைக்குள் கதை என சுழற்றிச்சுழற்றி அடிக்கிறது. ஓர் இமைக்கணத்தில் நிகழும் கதை. ஆகவே சொன்னதா நினைத்துக்கொண்டதா கனவா நிகழ்காலமா கடந்தகாலமா என்று தெரியவில்லை. திரௌபதி கிருஷ்ணனிடம் சொல்லும் கதை. அதற்குள் அவள் நாகினியிடம் கதைகேட்கிறாள். அந்தக்கதைக்குள் அவள் தன் அரண்மனையில் விறலியிடமும் ஐங்குழல் கொற்றவை அன்னையிடமும் கதைகேட்கிறாள். இந்தச்சுழற்சிதான் ஒரு பிரமையை உருவாக்கி இந்த அனுபவங்களை யதார்த்ததிலிருந்து பிரித்துவிடுகிறது. அதன்பிறகுதான் இந்த சுழிக்குள் நிகழும் கதைகளிலிருந்து தத்துவ உண்மைகளை நோக்கிச் செல்லமுடிகிறது

மனோகரன்