Sunday, December 21, 2014

இருதெய்வங்கள்



ஜெ

கடோத்கஜன் , இடும்பி இரண்டு கதாபாத்திரங்களையும் கள்ளமில்லாத அழகுடன் படைத்திருக்கிறீர்கள். மூல மகாபாரதத்திலேயே இரண்டு கதாபாத்திரங்களும் பண்பானவர்களாகவும் அன்பானவர்களாகவும்தான் இருக்கிறார்கள். அவர்களை சில இடங்களில் வியாசரே புகழ்ந்து பாடியிருக்கிறார். ஒரு கள்ளம் அவர்களிலே இல்லை. ஆனால் நாம் நேரடியான வர்ணனைகளாக அவர்களின் கதாபாத்திரத்தைப் பார்ப்பதற்கும் இப்படி கதைமாந்தராக நேரிலே சந்திப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

இடும்பியின் கதாபாத்திரம் ஏறத்தாழ இதேமாதிரி வியாசபாரதத்தில் உள்ளது. அவள் பீமனைச் சுமந்து செல்கிறாள். ஆனால் ‘நான் உங்களை என் வயிற்றால் அல்லவா சுமக்கிறேன்’ என்று அவள் சொல்லும் இடம் பலமடங்கு ஆழம் கொண்டதாக ஆகிவிடுகிறது.

அதேபோல இன்று வந்திருக்கும் கடோத்கஜனின் சித்தரிப்பு அழகானது. அவனுடைய குழந்தைத்தனம் அரக்கத்தனம் அன்பு எல்லாமே அழகாக வந்திருக்கிறது. கடோத்கஜன் மகாபாரதத்தின் அழகான கதாபாத்திரங்களில் ஒன்று. அதை அழகாகவே தொடங்கியிருக்கிறீர்கள்.

கடோத்கஜன் இடும்பி ரெண்டுபேருமே கடவுளாகக் கும்பிடப்படுபவர்கள். இரண்டு தெய்வங்களை மனிதர்களாக அறிமுகம் செய்து கொஞ்சம்கொஞ்சமாக மேலே கொண்டு போகிறீர்கள். அதிலே தெய்வாம்சம் ஆரம்பம் முதலே இருப்பதையும் காட்டுகிறீர்கள்

வாழ்த்துக்கள்

சுவாமி