Tuesday, December 23, 2014

திரைச்சீலை



ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய 'கோபுலுவும் மன்னர்களும்' கட்டுரையை படித்தேன். இனி எந்தவொரு ஓவியத்தையும் கூர்ந்து பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். இப்போதெல்லாம் வெண்முரசு மனதை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதனால் வெண்முரசில் திரைச்சீலை வரும் இடங்கள் நினைவிற்கு வந்தன. உதாரணமாக,

//சிட்டு ஒரு திரைச்சீலையில் சென்று அமர்ந்தது. “சித்ரகரே, இந்தத் திரைச்சீலையை புதிதாக அமைத்தீர்களா?” என்றான் கிருஷ்ணன். “ஆம்” என்றான் சித்ரகன்.//

//பீமன் ஒவ்வொரு வாசலாக நோக்கியபடி புழுதிபடிந்த தெருவில் மெல்ல நடந்தான். அவனுடைய கனத்த காலடியோசை தெருவில் ஒரு யானை செல்வதைப்போல ஒலியெழுப்பவே திரைச்சீலைகளை விலக்கி பல பெண்முகங்கள் எட்டிப்பார்த்தன.//


//உப்பரிகை ஒன்றில் ஒரு திரைச்சீலை ஆடக்கண்டு அகம் அதிர்ந்தது. உடனே நினைவுக்கு வந்தது, அந்த காந்தார அரசி. அவள் பெயர் சம்படை.//

இன்னமும் பாண்டு பற்றி நீங்கள் சொல்லும்போது அவர் அறையில் திரைச்சீலைகள் பல இருப்பதுபோல் கற்பனையில் கண்ட ஞாபகம். 



சேவியர்