Wednesday, December 17, 2014

ஒடுங்குபவர்



ஜெ

பீஷ்மரின் குண்ச்சித்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது. மகாபாரதம் வெண்முரசு ஆரம்பித்த நாலாவது அத்தியயாம் முதல் இவர் வந்துகொண்டிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. கங்கர் குடியிலே பிறந்த இளைஞனாக அறிமுகம் ஆகிறார். மெல்லமெல்ல வளர்ந்து முதுமையை அடைந்திருக்கிறார். அவரது மேனரிசம் களை நீங்கள் சொல்வது நுட்பமாக இருக்கிறது. வாயை மென்றுகொண்டிருப்பது, கால்களை ஒடுக்கி வைத்து உட்கார்ந்திருப்பது எல்லாமே அவரது மனநிலையை காட்டுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டிருக்கிறார் மனுஷன்

ஆனால் மூளை மட்டும் கூர்மையாக இருக்கிறது. உண்மையான ஷத்ரியனாக இருக்கிறார். கிருஷ்ணனைப்பற்றிச் சொல்லும்போது அவனுடன் பாரதவர்ஷத்திலேயே நான் மட்டும்தான் போரிட முடியும் என்று சொல்லும் இடத்தில் அவர் யார் என்பது தெரிகிறது

சம்பத்குமார்