Sunday, December 28, 2014

துரியோதனன் கோயில்



ஜெ சார்

இது உத்தரகண்டில் உள்ள ஹர் கி துன் சமவெளியில் மோரி அருகே அமைந்துள்ள துரியோதனனுக்கான கோயில். துரியோதனன் இங்கே சோமேஸ்வர் என்று கும்பிடுகிறார்கள். துர்யோதனன் இங்கே வந்து தங்கியிருந்ததாக நம்பப் படுகிறது. இந்த மக்கள் தங்களை துரியோதனனின் வாரிசுகள் என நினைக்கிறார்கள்

நாம் வில்லன் ஹீரோ என்ற வகையில் தொன்மங்களை பகுத்துக்கொள்கிறோம். துரியோதனனை  கடவுளாக நினைக்கக்கூடிய மக்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். அவர் கடவுள் என்ரால் கிருஷ்ணன் வில்லனாக இருந்திருபபர். கிருஷ்ணனை கடவுளாக நினைப்பவர்கள் வரலாற்றை ஜெயித்துவிட்டார்கள் இல்லையா?

அரவிந்த் குமார்